துருக்கிக்கும் சிரியாவிற்க்கும் மத்தியில், 1.3 மில்லியன் மக்கள் தொகை கொண்ட சைப்ரஸ் தீவு பெரும் மாற்றத்தின் அருகில் உள்ளது. 51 ஆண்டுகளாக கிரேக்க-துருக்கிய இன பிரச்சினைகளுக்கு பின், அது தாமதமாக உலக மேடையில் வந்திருப்பது, அதற்கு பெரும் வாய்ப்புகளையும், கேடுகளையும் கொடுக்க்கிறது.
1570ல் ஆட்டொமன் துருக்கிய சம்ராஜ்யம் அத்தீவையும், அதன் கிரேக்கம் பேசும் ஆர்தோடாக்ஸ் கிருத்துவர்களையும் கைப்பற்றியதில் இருந்து அந்த இனப்பிரச்சினை தொடங்குகிறது. அடுத்த முன்னூறு ஆண்டுகளில் துருக்கிய அனடோலியாவில் இருந்து வந்த துருக்கி பேசும் முஸ்லீம்கள் ஒரு சிறுபான்மை ஆனார்கள். 1878ல் இருந்து 1960 வரை இருந்த பிரித்தானிய அரசு இதில் எந்த மாற்றமும் ஏற்ப்படுத்தவில்லை. 1960ல் சைப்ரஸ் சுதந்திரம் அடைந்தபோது, துருக்கியர்கள் ஆறில் ஒரு பங்கு மக்கள் தொகை கொண்டிருந்தனர்.
இனப் பிரச்சினைகளை சமாளிக்க முடியாமல் பிரித்தனால் கைவிடப்பட்ட நாடு சைப்ரஸ் மட்டுமல்ல - இந்தியா, இராக், பாலஸ்தீனம், சூடான் போன்றவையும் - ஆனால் சைப்ரசில் மட்டும்தான் தனக்கு ஒரு நிரந்தர பணியை வைத்து, 2 மேலதிக நாடுகளை - துருக்கியையும், கிரீசையும் - , சைப்ரசின் விடுதலைக்கு உத்தரவாதமாக உள்ளே இழுத்தது.
இந்த குறும்பு செயல்பாடு இந்த தீவின் இரு இனங்களிடையேயும், இரண்டு மேலதிக நாடுகள் இடையேயும் நெருக்கடியை ஏற்படுத்தியது. 1974ல் இந்த நெருக்கடி கொதித்து, ஏதென்ஸ் சைபரஸ் தீவு முழுவதையும் கைப்பற்ற முயற்சித்து, அங்கரா (துருக்கி) தீவை ஆக்கிரமிக்க தூண்டியது. கிரேக்க ஆக்கிரமிப்பு ஒழிந்தது, ஆனால் துருக்கிய ஆக்கிரமிப்பு "வட சைப்ரஸ் துருக்கிய குடியரசு" என்பதற்க்கு அடிகோலியது, அது இன்று 40000 துருக்கிய குடியரசின் துருப்புகளால் பராமரிக்கப் படுகிறது. லட்சக்கணக்கான துருக்கியர்கள் அங்கு குடியேறி தீவின் மக்கள் தொகையில் பெரும் மாற்றம் ஆகியுள்ளது.
இப்படி சைப்ரஸ் துண்டிக்கப்பட்டு 35 வருடங்கள் வெளி உலகினால் புறக்கணிக்கப்பட்டு வந்தது - அதாவது இரு சமீப நிகழ்வுத்கள் தீவின் இருண்ட உள்ளநிலையை முடிக்கும் வரை.
முதலாவதாக , 2002ல் துருக்கியில் ஏ.கே. பார்ட்டி பிராந்தீயத்தில் அதிகாரம் செலுத்த வேண்டும் என்ற உத்வேகத்துடன் முதலில் இந்த ஆசையில் கட்டுப்பாடில் வைத்திருந்தது, ஆனால் 2011 தேர்தல் வெற்றியுடன், துருக்கிய ராணுவத்தின் மீது அரசியல் மேலதிகாரத்தை கொண்டுவந்தவுடன், இந்த ஆசை மலர ஆரம்பித்தது. இந்த அதிகார உத்வேகம் பல உருவங்களில் உள்ளது - இஸ்ரேலுடன் எதிர்ப்பை வளர்ப்பது, வட ஆப்பிரிக்காவில் வெற்றி விஜயம் போன்றவை ஆனாலும் கிழக்கு மத்தியதரையில் ஆதிக்கம் செய்வதில் நோக்கம் கொண்டுள்ளது. ஏகேபி பார்ட்டியின் ஆசைகள் இப்படி சைபரசின் ஆக்கிரமிப்பை உள்ளூர் பிரச்சினையில் இருந்து பெரிய் அளவிற்க்கு மாற்றி விட்டன.
இரண்டாவதாக , இஸ்ரேலின் மத்தியதரை பிரத்யேக பொருளாதார மண்டலத்தில் ஜூன் 2010ல் வாயு, எண்னை , சைப்ரசஸ் அருகில் கண்டுபிடிக்கப் பட்டது, சைப்ரஸை உலக சக்தி உற்பத்தி சந்தையில் உந்தி விட்டது. சைப்ரசீயர்கள் 300 ட்ரில்லியன் கன அடிகள் அமெரிக்க டாலர் 4 ட்ரில்லியன் இருக்கலாம் என மதிப்பிடுகின்றனர். இந்த மதிப்பீடுகள் பேராசை பிடித்த பார்வைகளை அழைக்கின்றன - குறிப்பாக துருக்கியில் இருந்து, இதனால் துருக்கி வாயு வருமானத்தில் தனக்கும் பங்கு கேட்கிறது. மேலும் ஏகேபி பார்ட்டியின் அதிகரிக்கும் யூத எதிர்ப்புடன், வெளி விவகார மந்திரி அஹ்மட் தவுதோக்லுவின் பேராசைகளை கூட்டினால் துருக்கி இஸ்ரேல் கட்டுப்பாடு கடல்களில் மேலாதிக்கம் செலுத்தும் ஆசைகளை பார்க்க முடிகிரது.
இந்த இரு வளர்ச்சிகளும் சேர்ந்து - துருக்கிய இலட்சியங்களும், பல ட்ரில்லியன் மதிப்பீடுள்ள வாயு திட்டுக்கள் வாய்ப்பும் - சைப்ரசையும், இஸ்ரேலையும் சுய பாதுகாப்பில் இணைக்கின்றன.. என் சமீப சைப்ரஸ் விஜயத்தின் போது , பல ஊடக, அரசு, வாணிக பெரும் புள்ளிகள் , இஸ்ரேலுடன் பாதுகாப்பு, பொருளாதார உறவை வலுப்படுத்தும் விருப்பத்தை தெரிவித்தனர்.
பொருளாதார முனையில், அரசு உயர் அதிகாரி ஒருவர் 5 இணை திட்டங்களை கோடிட்டார் : சைப்ரசுக்கு வாயு களத்தில் இருந்து ஒரு இணை திட்ட குழாய்கள், பின்பு திரவமாக்கும் தொழில்சாலை, மெதனால் தொழிற்சாலை, 1000 மெகாவாட் மின்சார உற்பத்திச்சாலை, ஒரு பின்புல சேமிப்பு, இவை எல்லாம் சைபரசில் இருக்கும். ஒரு ஊடக பெரும்புள்ளி வாயு சேகரத்தை இஸ்ரேலுக்கு விற்பதிலும், அந்த பணியை தன் கம்பெனி செய்வதில் ஆர்வம் காட்டினார்.
பாதுகாப்பு முனையில் பலர் இஸ்ரேலுடன் முழு நேர இணைப்பை விரும்பினர். சைப்ரஸ் இஸ்ரேலின் செறிந்த ராணுவ, பொருளாதார, அரசியல் பலத்தினால் பயன் அடையும். ஏற்கனெவே சைப்ரஸ் பாதுகாப்பில் அடியெடுத்திருக்கும் இஸ்ரேல், சைப்ரஸில் உள்ள, தன் கரைகளில் இருந்து 185 கி.மீ தூரத்தில் இருக்கும், பேஃபாஸ் விமானத்தளத்தின் உபயோகத்தை பெறலாம்.
அப்படிப்பட்ட இணைப்பு சைப்ரஸின் கூட்டு சேராமை கொள்கையை முடிக்கும், அந்தக் கொள்கை உலக நாடுகள் வடக்கு துருக்கிய சைப்ரசை மற்ற நாடுகள் அங்கீகரிப்பை தடுப்பதில் மேற்கொள்ளப்பட்டாலும், அக்கொள்கை பலன் ஒன்றும் சைப்ரசுக்கு கொண்டுவரவில்லை..
அதி சுய நம்பிக்கையும், ஒருகால் உலகைமீட்பவர் பாவத்தில் இருக்கும் துருக்கிய தலைமை அதிக மதயானை குணங்களை காட்டும் தருணம், அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன், ரஷ்யா இவை சைப்ரஸ்-இஸ்ரேல் நல்லுறவை வளர்ப்பதில் கவனம் செலுத்தி. துருக்கிய ஆக்கிரமிப்பு வாய்ப்புகளை குறைக்கலாம்.