பாராக் ஒபாமா, லிபியாவின் பல கால சர்வாதிகாரியின் கொலையின் மீது அபிப்பிராயம் தெரிவித்தார் "முவம்மார் அல் கதாஃபியின் மரணம் லிபிய மக்களை பாதுகாப்பதிலும், சர்வாதிகாரத்தை தூக்கி எரிவதிலும் நாம் உதவி செய்தது சரியான பாதைதான் என காட்டுகிறது" . இராக்கிலிருந்து அமெரிக்க துருப்புகளை இர்ண்டு மாதத்தில் வெளியே கொண்டு வரும் தன் முடிவைப் பற்றி அவர் "இராக்கில் யுத்தத்தை முடிவில் கொண்டு வரும் நமது யுக்தி பலித்து விட்டது" என சாதித்தார். இந்த வளர்ச்சிகளை சுட்டிக்காட்டி கொக்கரித்தார், "யுத்ததின் ஆக்ரோஷம் மங்குகிறது" , "நாம் உலகில் அமெரிக்க தலைமையை நிருவி விட்டோம்".
எவ்வளவு சௌகரியம் : ஒபாமாவின் உள்நாட்டு கொள்கைகள் (குறிப்பாக உத்யோக வாய்ப்புகள், உடல்நல பராமரிப்பு பற்றி) அவருடைய செல்வாக்கை கீழே தள்ளத் தள்ள, இப்போது வெளிநாட்டு கொள்கைகளில் வெற்றி கொண்டாடுகிறார். டெமோக்ரேடிக் கட்சி ஆதரவாளர்கள் அவருடைய சர்வதேச சாதனைகளை முன்வைக்கிறனர். ஒரு ஆதரவாளர்படி "பயங்கரவாதிகளுக்கும் சர்வாதிகளுக்கும் ஒபாமாவிற்க்கு எதிராக தற்காப்பு இல்லை" .
ஆனால் மத்தியகிழக்கு எச்சரிக்கையை வலியுறுத்துகிறது : லிபியா, இராக்கில் பல தவறுகள் நடக்கலாம். ஒபாமா தன் குண்டுதைரிய பீற்றல்களை வருந்தப் போகிறார் என எதிர்பார்க்கிறேன்.
லிபியாவில், யார் நாட்டை அரசாளும் தேசீய இடைக்கால குழுவில் பலமிக்கவராக ஆகுவர் என தெரியவில்லை.. இரண்டு பேர்கள் வழிகாட்டிகளாக உள்ளனர். முஹம்மத் ஜிப்ரில் (1952 பிறப்பு, முஹம்மத் ஜெப்ரில் எல் வர்ஃபால்லி எனவும் அறியப்படுபவர்) தேசீய இடைக்கால குழுவின் (தேஇகு) தாற்காலிக பிரதான மந்திரியாக இருந்தார். அவர் பிட்ஸ்பர்க் பல்கலைக் கழகத்தில் அரசியல் விஞ்ஞானத்தில் பி.எச்டி வாங்கி, அங்கு ஸ்ட்ராடெஜிக் திட்டமிடுதல் பற்றி போதித்தார். மேலும் 10 புஸ்தகங்களை பிரசுரித்துள்ளார், அதில் நன்றாக வரவேற்க்கப்பட்ட "இமேஜெரி அண்ட் இடியாலஜி இன் யுஎஸ் பாலிசி டுவர்ட்ஸ் லிப்யா 1969-1982" என்பதும் அடங்கும், மேலும் ஒரு புரொபஷனல் பயிற்சி , நிருவாக கன்ஸல்டன்சி கம்பெனியை ஆரம்பித்தார்.
மாறாக, ட்ரிபோலி ராணுவத் தலைவர் அப்துல் ஹகீம் பெலாஜ் (பி 1966) 1988ல் சோவியத்துகளை எதிர்க்க ஆஃப்கானிஸ்தான் சென்றார், லிபிய இஸ்லாமிய சண்டைக் குழுவின் தலைவராக இருந்து, 2004ல் சிஐஏவினால் கைது செய்யப்பட்டு , கதாபியின் கையில் ஒப்படைக்க்ப்பட்டு, 2010ல் வரை ஜெயிலில் இருந்தார்.
இருவருக்கும் உள்ள பெரிய வித்தியாசம்: ஒருவர் அமெரிக்க பலகலைக்கழக அறிஞர், மற்றொருவர் சிஐஏவினால் சித்திரவதைக்கு ஆளானதாக கூருகிறார். ஒருவர் லிபியாவை மேற்கு தலைமை உலகில் ஐக்கியப்படுத்த பார்க்கின்றார், மற்றொருவர் கிலாபத் மறுவாழ்வை கனவு காண்கிறவர்.
பெலாஜ் ஜிப்ரில் தலைமையில் தேஇகுக்கு விசுவாசத்தை வெளியிட்டாலும், அவர்கீழ் இருந்த ராணுவ யூனிட்டுகளை கட்டுப்படுத்துவதை எதிர்த்தார். லாஸ் ஏஞ்சல் டைம்ஸில் பேட்ரிக் மக்டோனல் நாசூக்காக கூரியதின்படி "எப்படி சிவிலியன் தலைமைக்கும் ராணுவ குழுக்களுக்கும் உள்ள உறவு செயலிடும் என்பது தெளிவாக இல்லை" . இன்னும் இடைஞ்சலாக , தேஇகு சேர்மேன் சட்ட அமைப்பு "இஸ்லாம் இசைவாக" இருக்க வேண்டும் என கூரியபோது, ஜிப்ரில் தன் ராஜினாமாவை வெளியிட்டார். லிபியா இஸ்லாமிச வழியில் சென்றால், ஒபாமா கடாபிக்கு ஏங்குவார்..
இராக்கில் , ஒபாமாவின் யுத்தத்தை முடிப்பதை சாதிப்பது, ஜார்ஜ் புஷ்ஷின் மே 1, 2003 பக்குவப்படாத நிலையில், உண்மையான போர் துவக்கத்தில் "இராக் போரில் அமெரிக்காவும் அதன் தோழர்களும் வெற்றி பெற்றுள்ளனர்" என சொன்னதை ஞாபகப் படுத்துகிறது. யு.எஸ். துருப்புகள் அங்கிருந்து வெளியேர , டெஹரான் அந்த நாட்டை தன் கையில் கொண்டு வந்து, ஒரு சத்ரபி (மேலாண்மை செய்யப்பட்ட நாட்டின் பழைய பாரசீகப் பெயர்) ஆக்குகிறது.
அமெரிக்காவின் எச்சரிக்கைகளை மீறி, டெஹரான் இராக்கின் அரசியலில் தலையிடுகிறது, ஆயுதக் குழுக்களையும், பயங்கரவாதத்தையும் ஆதரிக்கிறது, தன் ஆட்களை உள்ளெ அனுப்பியுள்ளது - இன்னும் அதிகமாக தலையிட திட்டம் போட்டுள்ளது. மேக்ஸ் பூட் எழுதுவதன்படி, அமெரிக்க துருப்புகள் பின் திரும்புவதால், "இராக்கில் நிர்மூலமான தோல்விக்கு வாய்ப்புகள் அதிகரிக்கிறன.நாம் இராக்கை பாதுகாப்பின்றி விடுவதால் இரானின் குட்ஸ் சக்தி புளகாங்கிதம் அடையும்" . பாக்தாத் இரானின் அச்சுறுத்தல்களை தாஜா செய்து எதிர்நோக்குகிறது.- உதாரணமாக அதன் ராணுவ தளபதி இரானுடன் பிராந்திய பாதுகாப்பு அமைப்பை பரிந்துரைத்தார்.
இரானின் முயற்சிகள் சீக்கிரம் நிரைவேறினால், ஒபாமாவின் தேர்தல் வெற்றி வாய்ப்பை வலுவாக அடக்கும். இங்கிருந்து ஒரு வருடத்தில் "யார் இராக்கை கோட்டை விட்டனர்" என்பது ரிபப்ளிகன் கட்சியின் போர்க்குரலாக இருக்கும். ஒபாமா 2007ல் இராக் ஸ்திரப்படுத்தும் அமெரிக்க முயற்சிகளை முழுத்தோல்வி என அழைத்தது, அந்தத் தோல்வியின் காரணமாக இருக்க அடிகோலுகின்றது..
2012 அமெரிக்க தேர்தல் வரை இராக் விழாமல் இருந்தாலும், இன்னும் 5-10 வருடங்களில் இராக்கில் (அதைப்போல் அஃப்கானிஸ்தானிலும்) மனித உயிரினாலும், பணச் செலவுகளாலும் மேற்கொள்ளப்பட்ட அமெரிக்க பிரயத்தினங்கள் பலனின்றி ஆகும் என முன்கணிக்கிறேன்.
பெலாஜ் ஜிப்ரில் மேல் வெற்றி கொள்வதுபோல், இரான் இராக்கு மேல் வெற்றி. அப்படி நடந்தால் ஒபாமாவும், டெமோக்ராட் கட்சியினரும் இன்றைய கிட்டப்பார்வை மிகுந்த அதிநம்பிக்கையை வருந்துவர்.
(டாக்டர் பைப்ஸ் மிடில் ஈஸ்ட் ஃபோரத்தின் பிரசிடண்ட், ஹூவர் இன்ஸ்டிட்யூஷன் ஆஃப் ஸ்டான்ஃபோர்ட் யூனிவர்சிடியில் விசிடிங் ஃபெல்லோ)