அரபு இஸ்ரேலிய சச்சரவை நகர்த்தும் விவகாரங்களில், பாலஸ்தீனிய நாடோடிகள் என்ற அந்தஸ்தில் அறியப்படும் நபர்களைவிட முக்கிய, மத்திய, சீர்கெடுக்கும், உணர்ச்சிபூர்வ, சிக்கலான பிரச்சினை ஒன்றும் இல்லை..
டெல் அவீவ் பலகலைகழகத்தின் நிட்சா நாஹ்மியாஸ்படி , இது ஐநா பாதுகாப்பு சபையின் மத்தியஸ்தர் கௌண்ட் ஃபோல்க் பெர்னாடோட்டினால் ஆரம்பிக்கப் பட்ட்து. பிரித்தானிய பாலஸ்தீனிய மேண்டேட்டிலிருந்து வெளியேறிய அரபுக்களை குறிப்பிட்டு, அவர் 1948ல், இஸ்ரேல் நாடு வந்த்தற்க்கு ஐநா காரணமாகியதால், அவர்கள் ஐநாவின் பொறுப்பு என வாதாடினார். இது மிகத்தவறாக இருந்தும், இக்கொள்கை இன்னும் உயிரோடு இருந்து ஐநா பாலஸ்தீய நாடோடிகளுக்கு இன்றும் மிகப்பெரும் கவனம் செலுத்துவதற்க்கு காரணமாக உள்ளது.
பெர்னாநோட்டின் கொடையாக , ஐநா பல நிறுவன்ங்களை பாலஸ்தீய நாடோடிகளுக்கு பிரத்யேகமாக செய்தது. அவற்றில் 1949ல் உண்டான ஐக்கிய நாடுகள் பாலஸ்தீனிய நாடோடிகள் பணி நிவாரண ஸ்தாபனம் (ஐநாபாநாபநிஸ்) முக்கியமானதாகும். அது ஒரே ஒரு மக்களை கவனித்துக் கொள்ளும் நாடோடி நிறுவனம் (ஐக்கிய நாடுகள் நாடோடிகள் ஹைகமிஷன் மற்றைய உலக நாடோடிகளை கவனிக்கிறது) மற்றும் (பணியாளர்கள் சங்கியத்தில்) மிகப்பெரிய ஐநா நிறுவனம் ஆகும்.
ஐநாபாநாபநிஸ் தன் பணியை துல்லியமாக வருணிக்கிரது " பாலஸ்தீனிய நாடோடிகள் என்ற மக்கள் பாலஸ்தீனத்தில் ஜூன் 1946 , மே 1948 நடுவில் வாழ்ந்து, 1948 அரபு-இஸ்ரேலிய சண்டையில் தங்கள் வீடுகளையும், வாழ்வாதாரத்தையும் இழந்தவர்கள்". இப்படிப்பட்ட நாடோடிகளின் எண்ணிக்கை (இது சில யூதர்களையும் சேர்த்து இருந்த்து) கடந்த 64 வருடங்களில் குறைந்து விட்ட்து. ஐநாபாநாபநிஸின் (மிகையான) 750000 என்ற பாலஸ்தீனிய நாடோடி எண்ணை எடுத்துக் கொண்டாலும், அதில் ஒரு பகுதிதான் , அதாவது 150000 நபர்கள் வாழ்கின்றனர்.
ஐநாபாநாபநிஸ் 3 நடவடிக்கைகளை எடுத்து , பாலஸ்தீனிய நாடோடி என்பதன் வரையறுப்பை பெரிதாக்கி விட்டனர்.. முதலாவதாக, வாடிக்கையான கொள்கைக்கு மாறாக , அது நாடோடி அந்தஸ்தை மற்ற அரபு நாடுகளுக்கு குடிமகனாவற்க்கும் கொடுத்தனர். இரண்டாவதாக , 1965ல், மற்றவர்கள் கவனிக்காமல் பாலஸ்தீய நாடோடி என்பதை ஆண் வாரிசுகளுக்கும் கொடுப்பதற்க்கு முடிவு எடுத்த்து., அதனால் அது நாடோடி என்ற அந்தஸ்தை பாலஸ்தீனியர்கள் தங்கள் வாரிசுகளுக்கும் கொடுக்க வழி செய்த்து. ஐநாபாநாபநிஸின் மிகப்பெரிய கொடையாளரான அமெரிக்க நாடுகள் இந்த மாற்றங்களை மிக மிதமாகத்தான் எதிர்த்த்து. 1982ல் ஐநா பொதுச்சபை இம்முடிவை ஊர்ஜிதம் செய்து, நாடோடி அந்தஸ்தை "பாலஸ்தீனிய ஆண் வாரிசுகளுக்கும், அவர்கள் தத்து எடுத்துக் கொண்ட குழந்தைகளுக்கும்" அளித்தது. மூன்றாவதாக , அது அந்த அந்தஸ்தை 1967 போர் அகதிகளுக்கும் கொடுத்தது. இன்று அவர்கள் ஐந்தில் ஒரு பங்கு ஆவர்.
இந்த மாற்றங்கள் பல விளைவுகளை கொடுத்தன. மற்ற நாடோடிகளுக்கு மாறாக பாலஸ்தீனிய நாடோடி எண்ணிக்கை கால ஓட்ட்த்தில் அதிகமாகியுள்ளது. இந்த விசித்திரத்தை ஐநாபாநாபநிஸ் ஒப்புக் கொண்டுள்ளது "இந்த நிறுவனம் 1950 தொடங்கியபோது 750000 நாடோடிகளை கவனித்தது, இன்று 5 மில்லியன் பாலஸ்தீனிய நாடோடிகள் எங்கள் சேவைகளை நம்பியுள்ளனர்" . மேலும், ஐநாபாநாபநிஸின் முன்னாள் ஆலோசகர் ஜேம்ஸ் லிண்ட்சே படி, ஐநாபாநாபநிஸ் வரையறுப்பின் படி 5 மில்லியன் எண்ணிக்கை, இரண்டு மடங்கு ஆக சாத்தியம் உள்ளது.
60 வருடங்களில் நாடோடி எண்ணிக்கையை குறைப்பது பதிலாக, ஐநாபாநாபநிஸ் எண்ணிக்கையை 7 மடங்கு உயர்த்தியுள்ளது. அந்த எண்ணிக்கை நாடோடி அந்தஸ்து பெண் வாரிசுகளுக்கும் கொடுக்கும் கோரிகை எழுந்தால் இன்னும் இரு மடங்கு ஆகும்.. இன்னும் 40 வருடங்களில், ஒரிஜினல் பாலஸ்தீனிய நாடோடி இறந்தாலும் இந்த போலி நாடோடிகள் அதிகரித்து கொண்டிருப்பர். அதனால் "பாலஸ்தீனிய நாடோடி" எண்ணிக்கை முடிவில்லாமல் அதிகரிக்கும். மிடில் ஏஸ்ட் ஃபோரத்தின் ஸ்டீஃவன் ரோஸன் படி "ஐநாபாநாபநிஸ் வரையறுப்புகளினால் எல்லா மனிதர்களும் பாலஸ்தீனிய நாடோடிகளாக வாய்ப்பு உண்டு" .
பாலஸ்தீனிய நாடோடிகள் வரையறுப்பு ஆரோக்யபூர்மாக இருந்தால், இந்த பெருக்கங்கள் கவலைதருவன அல்ல.. ஆனால் இந்த அந்தஸ்து இரு அழிவான உபாதைகளை தருவது. இஸ்ரேல், நாடோடி என்ற அந்தஸ்து பெற்று சாதிக்கமுடியாத கொள்ளுப் பாட்டன்களின் வீடுகளுக்கு திரும்பும் பகல்கனவுகளினால் உந்தப்படுபவர்களின் அழிச்சாட்டங்க; "நாடோடிகள்" என்ற அந்தஸ்து கோபம், வெறி, வெட்டிவேலை, தொத்துநிலை மிகுந்த கலாசாரத்தை ஊக்குவிப்பது.
இரண்டாம் உலகப்போரினால் வந்த நாடோடிகள் (என் பெற்றோர்களும் சேர்த்து) பல வருடங்களுக்கு முன் வாழ்வுஸ்திரம் அடைந்து விட்டனர்; பாலஸ்தீன நாடோடி அந்தஸ்து பல காலமான ஊறு விளைவிப்பதால், அதை இன்னும் கேடு விளைவிப்பது முன்னால், உண்மையான நாடோடிகளுக்கு குறுக்க வேண்டும்.