1967ல் இருந்து 1993 வரை, சில நூறு வெஸ்ட் பேங்க் அல்லது காஸா பாலஸ்தீனியர்கள் இஸ்ரேலிய அரபிகளை (இஸ்ரேலிய ஜனத்தொகையில் ஐந்தில் ஒரு பங்கு இருக்கும்) மணம் செய்து இஸ்ரேலில் வசிக்கும் உரிமையையும், இஸ்ரேல் குடி உரிமையும் பெற்றனர். பின்பு, ஆஸ்லோ உடன்படிக்கை இப்போது கானிக்கப்படாத குடும்ப-ஐக்கிய ஷரத்திகளின் மூலம் இந்த சிறு துளியை வெள்ளமாக்கினர்.: 137000 பாலஸ்தீனிய அதாரிடிவாசிகள் இஸ்ரேலுக்கு 1994-2002 காலத்தில் புகுந்தனர், சிலர் போலி அல்லது பல மணங்களும் செய்தனர்.
இஸ்ரேலுக்கு இந்த கட்டுப்படாத வந்தேறுவதை கண்டு பயப்பட இரண்டு காரணங்கள் உள்ளன. முதலில் அது ஒரு பாதுகாப்பு அச்சத்தை செய்கிரது. யுவல் டிஷ்கின், ஷின்பெத் பாதுகாப்பு சேவையின் தலைவர், 2005ல், இஸ்ரேலுக்கு எதிராக ஈடுபட்ட 225 இஸ்ரேலிய அரபுகளில் 25 பேர், அல்லது 11 சதவிகிதம், சட்டமுறையாக குடும்ப ஐக்கிய ஷரத்து மூலமாக இஸ்ரேலில் புகுந்தவர்கள். அவர்கள் 19 இஸ்ரேலிகளை கொன்று, 83 பேரை காயப்படுத்தினர்; குறிப்பாக ஷாடி டுபாசி ஹைஃபா மட்ஸா ரெஸ்டராண்டில் ஹமாஸ் சார்பில் தற்கொலை வெடிவைத்து 15 பேரை கொன்றார்.
இரண்டாவதாக அது பாலஸ்தீனியரின் திருட்டுத்தனமான திரும்பும் உரிமைக்கு அடிகோலி, இஸ்ரேலின் யூத குணத்தை மாற்றுகிரது. அந்த 137000 குடிமகஙள் இஸ்ரேல் ஜனத்தொகையில் 2%, அது குறைவான எண்ணிக்கை அல்ல. இன்றைய நிதி அமைச்சர் யுவல் ஸ்டைனிட்ஸ், 2003ல் பாலஸ்தீனிய அதாரிடியின் குடும்ப ஐக்கிய புரோக்ராம் , இஸ்ரேலில் பாலஸ்தீனியர்களில் ஜனத்தொகையை அதிகரித்து, இஸ்ரேலின் யூதத்துவத்தை வேண்டுமென்றெ குறைக்கும் திட்டம் என்றார். அஹமத் குரை , முக்கிய பாலஸ்தீனிய பிரதிநிதி இந்த அச்சத்தை ஊர்ஜிதப்படுத்தினார்; "இஸ்ரேல் எங்கள் பாலஸ்தீனிய நாட்டின் எல்லை கருத்துகளை மறுத்தபடியே இருந்தால், நாங்கள் இஸ்ரேலிய குடி உரிமை கோருவோம்" என்றார்.
இந்த இரு அபாயங்களுக்கு எதிராக, ஜூலை 2003ல், இஸ்ரேலிய பார்லிமெண்ட் "குடி உரிமை, இஸ்ரேலுக்குள் புகுதல்" சட்டத்தை நிறைவேற்றியது. இச்சட்டப்படி, பாலஸ்தீனிய குடும்ப நபர்கள் தானாகவே இஸ்ரேலிய குடியுரிமையும், வசிப்பு உரிமையும் பெறுவதை தடுக்கின்றது., இதில் சில தாற்காலிக, கட்டுப்படுத்தப்பட்ட தள்ளுபடிகளை விட்டு, உள்நாடு அமைச்சர் அவர்கள் "இஸ்ரேலுடன் அடையாளப்படுகின்றனர்" அல்லது மற்ற விதத்தில் உபயோகமாக உள்ளனர் என சான்று கொடுக்கவேண்டும். பலத்த எதிர்ப்புகளிடையே, அக்கால பிரதான மந்திரி ஏரியல் ஷரோன் 2005ல் "இஸ்ரேலிய நாடு தன் யூத குணத்தை பராமரிக்கவும் காக்கவும் எல்லா உரிமையும் கொண்டுள்ளது, அது குடியுரிமை கொள்கை மேல் தாக்கம் இட்டாலும்" என் அறுதியிட்டார்.
இந்த சட்டத்தை எதிர்த்த வக்கீல் சாசன் ஸாஹர்படி 33,000 தள்ளுபடி மனுக்களில் 33 தான் அங்கீகரிக்கப்பட்டதாம். கராரான குடும்ப ஐக்கிய நிபந்தனைகளில் இஸ்ரேல் ஒன்றும் தனியாக இல்லை; உதாரணமாக டென்மார்க்கில் இதைப்போல் விதிகள் பத்து வருடங்களுக்கு மேலுள்ளன, இதில் இஸ்ரேலிய கணவன் டென்மார்க்கில் நுழைவதற்க்கு தடை உண்டு; இதை நெதர்லாந்தும், ஆஸ்திரியாவும் பின்பற்றின..
போன வாரம், இஸ்ரேலிய சுப்ரீம் கோர்ட் , 6-5 ஓட்டுகளில், இந்த சட்டத்தை ஊர்ஜிதப்படுத்தி, அதை நிரந்தரமாக்கினர். நபர்களின் மண உரிமையை மதிக்கும் சமயத்தில், நீதிமன்றம், அது வாச உரிமைக்கு சமமானது அல்ல என்றது.கோர்ட்டின் அமர்வு ப்ரெசிடென்ண்ட் , ஆஷர் டேன் க்ரூனிஸ், பெரும்பான்மை அபிப்பிராயத்தை எழுதும்போது "மனித உரிமைகள் தேசீய தற்கொலைக்கு கட்டளை இல்லை" என்றார்.
இந்த யூதர்கள் அருகில் குடியேறும் பாலஸ்தீனியர்கள் யுத்தி 1882 ல் ஐரோப்பிய யூதர்கள் தங்கள் அலியாவை( ஹீப்ரூவில் 'மேல்செல்லுதல்' அதாவது இஸ்ரேலுக்கு புலம்பெயர்தல் என பொருள்) ஆரம்பித்தபோது வரை செல்கிறது. உதாரணமாக, 1939ல் வின்ஸ்டன் சர்ச்சில் எப்படி யூத குடியேற்றம் பாலஸ்தீனிய குடியேற்றத்தை ஊக்குவித்தது என்றார்.: "ஹிம்சைக்கு மாறாக , அராபியர்கள் நாட்டுக்குள் குடியேறி அவர்கள் எண்ணிக்கை அதிகமாகியது"
சுருக்கமாக, ஒருவர் ஸயனிஸ்டுகளின் சட்ட அடிப்படை சமுதாயம், உயர் வாழ்க்கை தரத்தை அனுபவிக்க , யூதராக இருக்க வேண்டியதில்லை. இதை ஆராய்ந்த ஜோன் பீடர்ஸ் , 1893 ல் இருந்து 1948 வரை, யூத, அரபியர் குடியேற்றம் சம அளவில் இருந்தது என்கிறார். இதில் ஆச்சர்யம் ஒன்றும் இல்லை - ஐரோபிய மக்கள் குடியேறிய மக்களில்லாத பகுதிகள் (ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா போல்) மற்ற உள்நாட்டு மக்களையும் தன்னுள் இழுத்தன
இந்த பாலஸ்தீனிய 'அலியா' போக்கு இஸ்ரேல் பிறந்ததில் இருந்து நடப்பது. ஸயநிசத்தின் எதிரியாகஇருக்கலாம் , ஆனால் பொருளாதார குடியேறிகள், அரசியல் மாறுபட்டவர்கள், ஒருபால்சேர்க்கையாளர், வேவு பார்ப்பவர்கள், மற்றும் சாதாரண மக்கள். காலினால் ஓட்டு போட்டு, மத்தியகிழக்கின் புதின, லிபரல் நாடான இஸ்ரேலை விரும்பி, ஹமாஸ் அல்லது பாலஸ்தீன அதாரிடியின் பிற்போக்கு உலகத்தை உதறுகின்றனர். எப்படி ஒரு சட்ட ரீதியான தடுப்பு இல்லையானாலும், மிகச்சில இஸ்ரேலிய அரபுகள் தங்கள் வாழ்க்கைதுணையுடன் சேருவதற்க்கு வெஸ்ட் பேங்க் அல்லது காஸா செல்கின்றனர் என்பதையும் நோக்குக.
சுப்ரீம் கோர்ட் முடிவு பல எதிர்கால நுட்பங்களை கொண்டது. எலி ஹசன் "இஸ்ரேல் ஹயோம்" பத்திரிக்கையில் எழுதுகிறார் " கோர்ட் முடிவு குறிப்பில் மட்டுமல்ல, உண்மையைலேயெ யூத நாடு என்று அறிவித்து, பல வருட வாதத்தை முடிக்கிறது. இந்த பின்வழியான "திரும்பும் உரிமையை" தடுப்பது, இஸ்ரேலின் ஸயனிச எதிர்காலத்தை பாதுகாக்கிறது.