நான் பல தடவை சொல்லியுள்ளேன் , இஸ்ரேல் மீதான இருண்ட, நாற்றமான அரபுப்போரின் அடிநாதம் ஜெரூஸலமோ, குடியிருப்புகளோ, சோதனைசாலைகளோ அல்ல, அது பாலஸ்தீனிய அகதிகள் என அழைக்கப்படுபவரைப் பற்றியது..
"அழைக்கப்படுகின்றனர்" ஏனென்றால் 5 மில்லியன் அகதிகளை அதிகாரபூர்வமாக சேவை ஐநாபாஅநிதா (" ஐக்கிய நாடுகள் அண்டை கிழக்கு பாலஸ்தீனிய அகதிகள் நிவாரண பணி ஸ்தாபனம்" என்பதன் சுருக்கு) செய்வதில் 1 சதவிகிதம்தான் அந்த ஸ்தாபனத்தின் வரையருப்பான "ஜூன் 1946 மே 1948 நடுவில் வழக்கமாக பாலஸ்தீனத்தில் வசித்து, 1948 இஸ்ரேல்-அரபு போரில் வீடுகளையும், பிழைப்பையும் இழந்த மக்கள்" கீழே வருவர், மற்ற 99% மக்கள் அந்த 1% அகதிகளின் வாரிசுகள், அவர்களை போலி அகதிகள் என அழைக்கிறேன்.
இன்னும் மோசம்: 1948 உயிருடன் இருந்தவர்கள் மடிந்து கொண்டுள்ளனர், இன்னும் 50 வருடங்களில் ஒரு அகதியும் உயிரோடு இருக்கப் போவதில்லை. . ஆனால் (மைக் டம்பரின் 'அகதி எண்ணிக்கை கால்வருடாந்திரி'யில் அதிகாரபூர்வமான யூகம் படி) போலி அகதி வாரிசுகள் 20 மில்லியனுக்கு மேல் இருப்பர். கட்டுப் படுத்தாவிட்டால், இது கணக்கில் அடங்காது வளரும்..
இது கவனிக்க வேண்டியது, ஏனெனில் அகதி அந்தஸ்து தீய விளைவுகளை கொடுப்பது, அது பல மில்லியன் அகதி இல்லாதவர்களுக்கு சமகால அந்தஸ்தை பிடுங்கி, தீர்க்கமுடியாத திரும்பும் கனவுகளை அவர்கள்மேல் திணிக்கிறது.; இன்னும் சொன்னால் அது இஸ்ரேல் மீது ஒரு நிரந்தர ஈட்டி வைத்து, இஸ்ரேலை தீங்குக்கு ஆளாக்கி, மேற்காசியாவை குலைக்கிறது.
அரபு-இஸ்ரேல் போரின் நிவாரணம் வளர்ந்துகோண்டே போகும் தீயசக்தியான போலி அகதிகளை முடிப்பதில் உள்ளது. 1948 நடந்து முடிந்து விட்டது, இப்போது யதார்த்தம் முக்கியம்.
மிடில் ஈஸ்ட் ஃபோரத்தின் ஸ்டீவ் ரோசனும் நானும் சேர்ந்து செய்த பணியின் ஓரளவு ஆதாரத்தில் , யு.எஸ். செனேட் அப்ரோப்ரியேஷன்ஸ் கமிட்டி மே 24 அன்று $52.1 பில்லியன் "2013 ஆண்டு ஸ்டேட் டிபார்ட்மெண்ட் ஃபாரின் ஆபரேஷன் அப்ரோப்ரியேஷன் பில்" என்பதில் சிறிய மாற்றம் ஒன்றை ஏற்றுக் கொண்டுள்ளது என்பதை பெருமையுடன் எழுதுகிறேன்.
மார்க் கர்க்கினால் (இல்லினாய் ரிபப்ளிகன்) கொண்டுவரப்பட்ட இந்த மாற்றம் காங்கிரசுக்கு ஸ்டேட் டிபார்ட்மெண்ட் வருடாந்திர $240 மில்லியன் நேரடி அமெரிக்க வரிகொடுப்பாளர் தொகையை ஐநாபாஅநிதா வழியாக பாலஸ்தீனிய அகதிகள் மேல் எப்படி செலவிடுகிரனர் என கேட்கிரது. ஐநாபாஅநிதா அகதிகள் வரையருப்பில் எவ்வளவு பலனடைபவர்கள் உள்ளனர் என கர்க் கேட்கிறார்.? எவ்வளவு பேர் உண்மை அகதிகள், எத்தனை பேர் வாரிசு போலி அகதிகள் எனவும் கேட்கிறார்.
கர்க் மாற்றங்கள் போலி அகதிகளுக்கு வரும் கொடையை தடுக்கவோ, அல்லது குறைக்கவோ முயலவில்லை. சிறிய அளவில் இருந்தாலும், கர்க் இந்த அறிவிப்பு நிபந்தனையை முக்கியம் என்கிறார்.. அது ஜார்டன் அரசு மற்றும் ஐநாபாஅநிதா தரப்பிலிருந்தும், பலத்த எதிர்ப்பை கொண்டு வந்ததை 'ஃபாரின் பாலிஸி' சஞ்சிகையின் ஜாஷ் ரோகின் யுத்தம் என்கிறார்.
ஏன் அவ்வளவு சீற்றம்? ஏனெனில் ஸ்டேட் டிபார்ட்மெண்ட் உண்மை அகதிகளை போலிகளிடமிருந்து பிரித்தால், அமெரிக்க மற்றும் மற்ற மேற்கத்திய அரசுகள் (சேர்ந்து 80% ஐநாபாஅநிதாவின் நிதியை கொடுக்கிறனர்) ஒருநாள் போலி அகதிகளை கைவிடலாம், அதனால் அவர்கள் இஸ்ரேலிற்க்குள் "திரும்பும் உரிமையை" இழக்கலாம்.
துக்ககரமாக , ஒபாமா அரசு இந்த பிரச்சினையை சொதப்பி விட்டது. கர்க் மாற்றத்தை நிராகரிக்கும் டெபுடி செக்ரடரி ஆஃப் ஸ்டேட் தாமஸ் ஆர் நைட்ஸின் மடல் குழப்பத்தைதான் காட்டுகிரது. ஒரு பக்கம், நைட்ஸ் கர்க் அமெரிக்க அரசாங்கத்தை "பாலஸ்தீனிய அகதிகளின் எண்ணிக்கையையும், அந்தஸ்தையும் பகிரங்கமாக்கி, இந்த முக்கிய பிரச்சினையின் முடிவை முந்தீர்மானிக்கும்" என கட்டாயப்படுத்தும் என்கிறார். அதே சமயம், நைட்ஸ் முந்தீர்மானிப்பதை எதிர்ப்பதை மறந்து "தோராயமாக 5 மில்லியன் பாலஸ்தீனிய அகதிகள்" என்று உண்மை அகதிகளையும், போலிகளையும் கூட்டுகிறார். அந்த 5 மில்லியன் எண்ணிக்கை தற்செயல் இல்லை; ஸ்டேட் டிபார்ட்மெண்ட் ஸ்போக்ஸ்மேன் பேட்ரிக் வெண்ட்ரல் கொள்கை அளவில் " அகதிகளின் வாரிசுகளை அகதிகளாக அடையாளப்படுத்த" "யு.எஸ். அரசு ஆதரவளிக்கிரது" என ஊர்ஜிதப்படுத்தினார்.
மேலும், "மிக பலத்த அரபு எதிர்ப்பு (மாற்றாத்துக்கு) வரும்" என ஆருடம் சொல்லி, அரபு எதிர்ப்பை நைட்ஸ் வரவழித்து, அமெரிக்க செனேட் மேல் அரபு அழுத்த்த்தை உண்மையாக்கியது, ஸ்டேட் டிபாட்மெண்ட்டுக்கு தகுந்த்தல்ல.
கடந்த 64 ஆண்டு கால இஸ்ரேலின் வாழ்க்கையில் ஒவ்வொரு யு.எஸ். ஜனாதிபதியும் அரபு-இஸ்ரேல் போரை முடிக்க உறுதி கொண்டுள்ளனர், ஆனால் ஒவ்வொருவரும் இப்போரின் அசிங்கமான உண்மையை – அதாவது அகதி பிரச்சினையை வைத்து இஸ்ரேலின் அடிப்படை உயிர்க்கு உலை வைப்பது – உதாசீனம் செய்தனர். செனேடர் கர்க், அவர் துணையாளர்களுக்கு அவர்கள் விவேகத்திற்க்கும், கசக்கும் யதார்த்தைத்தை நேராக பார்க்கும் துணிச்சலுக்கும் பாராட்டுகள், இது போரின் மையப்பிரச்சினைக்கு மாற்றங்களை கொண்டு வரும்.