1989ல் பதிக்கப்பட்ட சல்மன் ரஷ்டியின் நாவலில் இருந்து 2010ல் வந்த "ஒவ்வொருவரும் முஹம்மது படம் வரையுங்கள்" என்ற அமெரிக்க சிவில் எதிர்ப்பு வரை, ஒரு பரிச்சயமான போக்கு வருகின்றது.
மேற்கத்தியவர்கள் இஸ்லாமை பற்றி விமர்சனம் எதாவது செய்வதில் இப்போக்கு ஆரம்பிக்கிறது. இஸ்லாமிஸ்டுகள் உடனே வசவிலும், சீற்றமடைவதிலும், வாபஸ் கோருவதிலும்,, சட்டமன்ற கேஸ் போடுவதிலும், வன்முறை பயமுருதுதலிலும், வன்முறையிலும் பதில் கொடுக்கிறனர். அதற்கு பதிலாக மேற்கத்தியவர்கள் கனைக்கின்றனர், பின் வாங்குகிறனர், வாயை மூடிக் கொள்கிறனர்.
ஒவ்வொரு சர்ச்சையும் சுதந்திரப் பேச்சு உரிமை மீது விவாதமாகி விடுகிரது..
நான் இங்கு இரு விஷயங்களை வாதிக்கிறேன். முதலாக, மேற்கத்தியவர்களின் இஸ்லாம் மீதான் விவாத, விமர்சன மற்றும் கேலி செய்யும் உரிமைகள் கடந்த காலத்தில் மழுங்கி விட்டன.
இரண்டாவதாக சுதந்திர பேச்சுரிமை இன்னும் பெரிய சமாசாரத்தில் சிறிய பங்காகும். - நம் காலத்திய முக்கிய கேள்வி என்ன : மேற்கத்தியவர்கள் தமது நாகரீகத்தை இஸ்லாமிஸ்டுகளின் வன்முறைக்கு எதிராக காப்பாற்றுவார்களா, அல்லது இஸ்லாமிய கலாசாரத்திற்க்கும் சட்டத்திற்க்கும் அடிபணிந்து இரண்டாவது நிலை குடி உரிமைகளுக்கு சம்மதிப்பார்களா?
இஸ்லாமிஸ்டுகளின் கூக்குரல் திடீலென பிப்ரவரி 14, 1989ல் , இரானின் மேல்நிலை தலைவர் அயதொல்லா ருஹோல்லா கொமைனி டெலிவிஷனில் பாகிஸ்தானியர்கள் தென் ஆசிய பூர்வீகமுள்ள எழுத்தாளர் சல்மன் ரஷ்டியின் புது நாவலுக்கு எதிராக போராடியதை பார்த்ததில் இருந்து துவங்கிற்று.. அந்த புஸ்தகத்தின் தலைப்பு "சைத்தானின் கவிதைகள்" குரானுடன் தொடர்புடையவையாதலின் இஸ்லாமிய உணர்வாளர்களுக்கு நேரடி சவாலாக போயிற்று., அதன் உள்ளடக்கம் பிரச்சினையை தீவிரமாகிற்று.. ருஷிடியினால் தெய்வநிந்தனையான இஸ்லாமின் குணச்ச்சித்திரம் என கொமைனி எண்ணியதால், அவர் இட்ட ஆணை இன்னும் தாக்கம் அளிப்பதால், அதை முழுவதும் மேற்கோள் காட்டவேண்டியுள்ளது.
"நான் எல்லா சிரத்தையுள்ள முஸ்லிம்களுக்கு தெரிவிப்பது என்னவென்றால், இஸ்லாம், நபி, குரான் மூன்றுக்கும் எதிராக "சைத்தானின் கவிதைகள்~"என்ற புஸ்தகத்தின் எழுத்தாளரும், அதைத் தெரிந்து வெளியீட்டாளர்களும் மரண தண்டனை பெறுகின்றனர்.
நான் சிரத்தயுள்ள எல்லா முஸ்லிம்களையும் ரஷ்டி எங்கிருந்தாலும் கொலை செய்ய வேண்டுகிறேன், ஏனெனில் அதன் பிரகு யாரும் இஸ்லாமை அவமதிக்க மாட்டார்கள்; யார் இந்த செயலில் மரணம் அடைந்தாலும் கடவுள் புண்யத்தில் அவர்கள் மதத்தியாகி ஆவார்கள்.
மேலும் எவராவது இந்த எழுத்தாளர் இருக்கும் இடம் தெரிந்தால் உடனே மற்ற முஸ்லிம்களுக்கு தெறிவித்து அவ்வெழுத்தாளர் மரணம் அடைய வழி பார்க்கவும்"
இந்த முன் உதாரணம் இல்லாத ஆணை - எந்த நாட்டு அதிபரும் மற்றொரு நாட்டில் வாழும் எழுத்தாளர் மீது மரன தண்டனை கொடுத்ததில்லை - திடீலென வந்து எல்லோரையும் வியப்புக்கு உள்ளாக்கியது, இரானிய அரசு அதிகாரிகள் முதல் ரஷ்டி வரை. யாரும் மேஜிகல் மெய்வாத நாவல், அதில் மனிதர்கள் ஆகாயத்தில் இழுந்து விழுகின்ரனர், மிருகங்கள் பேசுகிரன –புத்தகாசிரியருக்கு இரான் தொடர்பு ஒன்றுமில்லாதபோது, இரானியத் தலைவரின் சினத்தை எழுப்பும் என எதிர்ப்பார்க்கவில்லை.
இந்த ஆணை இத்தாலி, நார்வே, யு..எஸ். ஆகிய நாடுகளில் புஸ்தக கடைகளின் மீது வன்முறையை தூண்டியது, சைத்தானின் கவிதைகளின் மொழி பெயர்ப்பாளர்கள் மீதும் வன்முறை நடந்தது, 36 பெயர்கள் ஒரு ஹோட்டலின் மீது நடந்த தீவீச்சில் மடிந்தனர் . முஸ்லிம்கள் இருக்கும் நாடுகளில், பொதுவாக தென் ஆசியாவில் 20 பேர் வன்முறையில் இறந்தனர். இந்த ஆர்பாட்டங்கள் 1989ல் குறைந்தபோது, கொமைனி இறந்தார்; அவருடைய மரணம் ஃபட்வா என தவறாக சொல்லப்படும் அவர் ஆணையை மாற்றமுடியாததாக ஆக்கியது..
அந்த ஆணை 4 முக்கிய அம்சங்களை கொண்டது. முதலில் "இஸ்லாம், முஹம்மது , குரானுக்கு எதிர்ப்பு" என சொல்லி, கொமைனி பல விவாத விஷயங்களை மரியாதை குறைவாக சொன்னால் மரண தண்டனைக்கு ஆள்படுத்தப்படுவர் என சொல்லிவிட்டார்.
இரண்டாவதாக "அதை (சைத்தானின் கவிதைகள்) வெளியிட்டவர் எல்லோரும்" என தண்டனைக்கு ஆளாக்கி, எழுத்தாளர் மட்டுமல்ல, ஆயிரக்கணக்கான வெளியீட்டு நிருவனங்கள், புஸ்தக கடைகள், வினியோப்பவர்கள், அட்வெர்டைசிங் செய்பவர்கள் என்ற தொழில்துறை சார்ந்தவர்களையும் தண்டகைக்கு உள்ளாக்கினார்.
மூன்றாவதாக "யாரும் இஸ்லாத்தை அவமானம் செய்யக் கூடாது" என்ற காரணத்தால் ரஷ்டிக்கு மரண ஆனை கொடுத்ததினால், ஒரு எழுத்தாளரை தண்டிப்பது மட்டும் அல்ல, எதிர்கால கேலிகளையும் தடுக்கும் நோக்கு இருந்தது..
கடைசியாக, ரஷ்டியை கொல்ல முடியாதவர்கள் "தகவல் கொடுக்க வேண்டும்" என கூரி, உலக முஸ்லிம்களை இஸ்லாத்தின் தெய்வீகத்தை பாதுகாக்கும் ஒரு உளவு அணியாக இருக்க கொமைனி விரும்பினார்.
இந்த நாலு 'விதிகளும்' நான் ரஷ்டி விதிகள் என்றழைக்கிறேன். இரண்டு தசாப்தங்கள் கழித்தும் கூட, அவை இன்னும் இயங்குகின்றன.
அந்த ஆணை மேற்குலகில் பல முன்னோடிகளை ஏற்படுத்தியது. ஒரு வெளிநாட்டு அரசியல் தலைவர் வெற்றிகரமாக வழக்கமான நாட்டு அதிகாரங்களின் வரம்பை மீறினார்.. ஒரு மதகுரு தன்போக்குக்கு மேற்குலக கலசாரத்தில் சிறிதும் தடையின்றி உள்ளிட்டார். ஒரு முஸ்லிம் தலைவர் ஒரு இஸ்லாமியர் அல்லாத நாட்டில் ஷரியா என்ற இஸ்லாமிய சட்டத்தை அமல்படுத்தும் முன் உதாரணத்தை வைத்தார். இந்த கடசி விஷயத்தில் மேற்குலக அரசுகள் கொமைனியின் ஏஜெண்டுகளாக செயல்பட்டன.. ஆஸ்ட்ரிய அரசு ருஷ்டி விதியை மீறின ஒருவருக்கு தாற்காலிகமாக நிருத்தபட்ட ஜெயில் தண்டனையை கொடுத்தது, பிரெஞ்சு, ஆஸ்திரேலிய அரசுகள் சிலர் மீது ஜெயிலுக்கு அனுப்பப்படும் குற்றச்சாட்டுகளை கொண்டுவந்தன. கனடா, கிரேட் பிரிட்டன், நெதெர்லாந்து, ஃபின்லாந்து, இஸ்ரேல் அரசுகள் சில நபர்களை சிறையில் இட்டன. இப்போது 1989 முன் நிலவிய மேற்கத்தியவர்கள் தங்கு தடையின்றி இஸ்லாம் பற்றி பேசுனதையும், எழுதினதையும் ஞாபகம் படுத்த முயற்சி செய்ய வேண்டி உள்ளது.
ருஷ்டி விதிகள் மேற்கத்திய முஸ்லிம்கள் மீது உடனே தாக்கம் எடுத்து, வன்முறைகளும் அவமதிப்புகளும் புதிய வீரியத்தை கொடுத்தன. ஸ்வீடனில் இருந்து நியூஸீலண் வரை முஸ்லிம்கள் பல நூற்றாண்டுகளாக பாதுகாபு உணர்வுகளிலுருந்து விடுதலை பெற்றூ தங்கள் குரலை அடைந்ததாக நம்பினர், அதனால் மேற்குலகின் அடித்தளத்தில் இருந்து மேற்கை தாக்கலாம் என முடிவெடுத்தனர்.
அதனால் வந்த வன்முறை கண்மூடித்தனமாக இருக்கின்றது , 9/11 (அமெர்க்கா மீது), பாலி, மட்ரிட், லண்டன் போன்றவற்றில் ஜிஹாதிகள் யார் எதிரில் நின்றாலும், அவர்களை கொன்றனர். http://www.thereligionofpeace.com/ என்ற தளம் சராசரியாக ஒவ்வொரு நளும் 5 கண்மூடித்தனமான ஜிஹாத் ஆதங்கவாத சம்பவங்களை ஆவணப்படுத்துகிறது.
பொதுவாக இல்லாவிட்டாலும், இன்னும் பயமுறுத்துவது ருஷ்டி விதிகளை மீறுபவர்களை குறிவைப்பது. இதை ஒரு நாட்டில் உதாரணமாக எடுத்துக் கொள்வோம்; டென்மார்க். 2004 அக்டோபரில் காபன்ஹேகன் யூனிவெர்சிடியின் கார்ஸ்டன் நீபுர் இன்ஸ்டிட்யூட்டில் வாத்தியாராக பல தெரியாத மனிதர்களால் தாக்கப்பட்டார். அவர்கள் அவர் கொரானை படித்ததாகவும், கஃபீர்கள் அப்படி செய்யக்
கூடாது எனவும் சொல்லிப் போயினர். அடோபர் 2005ல் இல்லண்ட்ஸ் போஸ்டின் தொகுப்பாசிரியர் ஃப்ளெம்மிங் ரோஸ் முஹம்மது பற்றிய கேலிசித்திரங்களை வெளியிட்டதற்க்காக கொலை மிரட்டல் செய்யப் பட்டார்.. இரண்டு கார்டூனிஸ்டுகள் ஒளிய வேண்டி உருந்தது. அதில் ஒருவர் குர்ட் வெஸ்டர்கார்ட் மயிரிழையில் வீட்டுக்குள்ளே தாக்காப்பட்டதில் பிழைத்தார். மார்ச் 2006ல், இஸ்லாமிஸ்டுகள் எதிரி அரசியல்வாதி நாசர் காதர் ஒரு இஸ்லாமிஸ்டால் அவர் அரசாங்க மந்திரியானல் அவரும் அவருடைய அமைச்சகமும் குண்டினால் தாக்கப்படுவர் என எச்சரிக்கை கொடுக்கப்பட்டார்.
டென்மார்கின் அனுபவம் எடுத்துக்காட்டாக உள்ளது. வால் ஸ்ட்ரீட் ஜர்னல் படி ஐரோப்பாவில் பல டஜன் நபர்கள் முஸ்லிம் தீவிரவாதிகள் கொலை மிரட்டலால் ஒளிந்து வாழ்கின்ரனர் அல்லது போலீஸ் பாதுகாப்பில் உள்ளனர். போப் பெநெடிக்ட்16 ம் இஸ்லாமைப் பற்றிய ஒரு பிசாண்டன் சக்ரவர்ட்தியின் மேற்கோள் காட்டியதற்க்காக இஸ்லாமிஸ்டுகளின் அச்சுருத்தலுக்கு ஆளானார்.
நெதெர்லாந்தில் அரசியல்வாதிகள் ஒரு வருடத்திலேயே 121 கொலை மிரட்டல்களை வாங்கினர். தியோ வான் கோக் என்ற பிரபல சுதந்திரவாதி, படச்செயலாளர், டிவி ஹோஸ்ட், பத்திரிக்கை எழுத்தாளர் இஸ்லாமை கேலி செய்ததற்க்காக சிரச்சேதம் செய்யப்பட்டது அந்த நாட்டை தீவிரமாக உலுக்கி, ஒரு கலக நிலைக்கு அருகில் சென்றது.
மேற்க்கத்தியவர்கள் பொதுவாக இந்த வன்முறை பேச்சு சுதந்திர உரிமைக்கு சவாலாக பார்க்கிரனர். பேச்சுரிமை போர்தளமானால் , இன்னும் பெரிய யுத்தம் மேற்கு நாகரீகத்தின் அஸ்திவார விவகாரமாகும். அடிக்கடி வரும் இஸ்லாமிஸ்டு ஆர்பாட்டங்கள் எப்போதும் சீராக சொல்லப்பட்ட 3 குறிக்கோள்களை கொண்டது, அவை இஸ்லாமின் விமர்சனத்தை மீறிச் செல்வதாகும்..
முதல் குறி இஸ்லாத்தின் மேட்டிமைத்தனத்தை நிருவுவது. கொமைனியின் மூன்று கோரிக்கையான "இஸ்லாம், முஹம்மது, கொரான்" இவற்றின் சிறப்பு அந்தஸ்து உலக கருத்துப் போட்டியை மறுத்து ஒரு கருத்துக்கு மட்டுமே சிறப்பு இடத்தை தருவதாகும். இஸ்லாம் மற்ற மதங்களுக்கு கிடைக்காத இடத்தை பிடிக்கப்பார்க்கிறது. ஏசு கிருஸ்து மாண்டி பைதானின் "லைஃப் ஆஃப் ப்ரையன்" அல்லது டெர்ரி மக்நல்லியின் "கோர்பஸ் க்ரிஸ்டி" ஆகிய புஸ்தகங்களில் கடுமையான நையாண்டிக்கு ஆளாகலாம், ஆனால் ஒரு புஸ்தக தலைப்புபடி "முஹம்மதிடன் ஜாக்கிரதை".
இது இரண்டாவது குறியுடன் இணைகிறது - முஸ்லிம்களின் மேட்டிமைத்தனம், மேற்கத்தியவரின் தாழ்வுநிலை. முஸ்லிம்கள் சகஜமாக மேற்கத்தியவர்களை இழிமைப்படுத்தும் படி பேசுகிறனர், செய்கின்ரனர், அது மேற்கத்தியவர்கள் செய்வதைவிட பல மடங்கு அதிகம். அவர்கள் வெளிப்படையாகவே மேற்கு கலாசாரத்தை வெறுக்கின்ரனர், ஒரு அல்ஜீரிய இஸ்லாமிஸ்ட்படி, மேற்கத்திய நாகரீகம் இல்லை, மேகரோகம். முஸ்லிம் பொது ஊடகங்கள் ஃப்ளெம்மிங் ரோசின் கார்டூன்களை விட பல மடங்கு கொச்சையான , பச்சையான , வன்முரையான கார்டூஙளை பிரசுரிக்கிரனர் அவர்கள் யூதமதம், கிருத்துவம், ஹிந்துமதம், பௌத்தம் ஆகியவற்றை தடையில்லாமல் அவமானம் செய்கிரனர். அவர்கள் யூதர்கள் யூதர் என்றெ ஒரே காரனத்திற்காக கொலை செய்கிரனர் – இதில் பாகிஸ்தானில் டேனியல் பேர்ள், பிரான்சில் செபாஸ்டியன் ஸெல்லம், இலான் ஹலிமி, அமெரிக்காவில் பாமெலா வாக்டர், ஏரியல் ஸெல்லூக் அடங்கும். பயத்தினாலேயோஒ அல்லது கவனக் குறைவினாலேயோ, மேற்கத்தியவர்கல் இந்த சமச்சீர்கெட்ட நிலைக்கு தள்ளப்படுகின்றனர், அதனால் முஸ்லிம்கள் எப்படியாது புண்படுத்தலாம், ஆனால் முஸ்லிம்கள் திரும்பி வரும் புண்படுத்துதலில்
இருந்து விலக்கு வாங்கலாம்.
மேற்கத்தியவர்கள் இந்த சம்க்கேடை இசைவித்தால், திம்மி நிலைதான் அடுத்தது. இந்த இச்லாமிய் கருத்து "நூலின் மக்கள்" என்றழைக்கப்படும் யூத, கிருஸ்துவர்களை முஸ்லிம் ஆட்சிக்கு கீழ் தங்கள் மதத்தை நடத்த அனுமதிக்கிரது, பல தடைகளுடன். ஒரு காலத்தில் திம்மி அந்தச்து சில பலஙளை கொடுத்தது ( சமீபகால 1945 வரை யூதர்கள் இஸ்லாமிய சமூகங்களில் கிருத்துவ சமூகங்கள்
உள்ளான வாழ்க்கையைவிட பரவாக இல்லை) , ஆனால் அது முஸ்லிம் இல்லாதவர்களை அவமானப்படுத்தும் நோக்கு கொண்டிருந்தது. திம்மிக்கள் வரி கட்ட வேண்டும், ஆனால் ராணுவத்திலேயோ, அரசாங்கத்திலேயோ பணி செய்ய முடியாது, பல சட்டரீதியான குறைகளை பொறுத்துக் கொள்ள வேண்டும். சில இடங்களில் திம்மிகள் கழுதை மீது போகலாம், ஆனால் குதிரை மீது போகக் கூடாது,
ஒரு விதமான ஆடை உடுத்த வேண்டும், கிழ திம்மிகள் கூட முஸ்லிம் குழந்தையை பாதையில் பார்த்தால் , அதற்கு ஒதுங்கி வழி விட வேண்டும். திம்மி அந்தஸ்தின் சில பகுதிகள் இப்போது காஸா, மேற்குக்கரை, சௌதி அரேபியா, இராக், இரான், அஃப்கானிஸ்தான், பாகிஸ்தான்,மலேசியா, பிலிப்பீன்ஸ் போன்ற இடங்களில் அமலாகுகிறது, லண்டனும் பிற இடங்களும் திம்மி முறைகள் பெறலாம்.
திம்மி முறையை நிருவிப்பது இஸ்லாமிஸ்டுகளின் முன்றாவது குறிக்கு இன்னொரு அடியை வைக்கிரது - ஷரியா நீதிகளை முழுதாக நிருவிப்பது. இஸ்லாம் பற்றிய விவாதங்களை நிறுத்துவது இந்த முடிவை நோக்கி நகர்வதாகும்.. திருப்பிப் பார்த்தால், இஸ்லாம் பற்றி பேசுவதற்க்கு பேச்சு உரிமையை நிலைநிறுத்துவது இஸ்லாத்திய நெறிகளை திணிப்பதர்கு நல்ல எதிர்மருந்து. நம் நாகரிகத்தை பராமரிப்பதற்கு இஸ்லாம் பற்றி விவாதங்களை சுதந்திரமாக வைப்பது இன்றி அமையாதது.
ஷரியா தனிமனித, மற்றும் வெளியுலக வாழ்க்கையை கட்டுப் படுத்துகிறது. தனிமனித விவகாரங்களில் உடம்பு அழுக்கின்மை, செக்ஸ் வாழ்க்கை, குழந்தப்பேறு, குடும்ப உறவு, ஆடை, சாப்பாடு கட்டுப்படுத்தபப்டுகிறன. பொதுவெளியில், ஷரிய சமூக உறவுகள், வணிக கொடுக்கல்வாங்கல், குற்றவாளி தண்டனைகள், பெண்கள், சிறுபான்மையினர் அந்தஸ்து, அடிமைகள், ஆட்சியாளரின் அடையாளம், நீதித்துறை, வரித்துறை, போர் நெறி ஆகியவை கட்டுப்படுத்தப்படுகிரன. சுருக்கமாக சொன்னால், இஸ்லாமிய நீதி கக்கூஸ் செயல்பாடுலிருந்து போர் முறைகள் வரை கட்டுபடுத்துகிரது.
ஷரியா மேற்கு நாகரீகத்தின் அடிப்படை கோள்களினிடம் இருந்து முரன்படுகிரது. ஆண்-பெண் , முஸ்லிம்-கஃபிர், அடிமை-எஜமான் ஆகியவற்றில் சமம் இல்லாத உறவுகள் எல்லோருக்கும் சம உரிமைகள் என்பதிற்க்கு முரணானவை.. பல மனைவி அந்தப்புரம் ஒரு மனைவி முறையை எதிர்க்கிரது. இஸ்லாமின் மேன்மைத்தனம் மத சுதந்திரத்திற்கு எதிரானது. எல்லாவத்தையும் ஆட்டிபடைக்கும் சர்வவல்லமையான கடவுள் ஜனநாயகத்தை அனுமதிக்க் முடியாது.
இஸ்லாமிஸ்டுகள் இஸ்லாமிய நீதிகளை உலகெங்கிலும் அமல்படுத்த ஒத்துக் கொள்கின்ரனர். ஆனால் அதை வன்முறையாலா (பின் லாடன்) , சர்வாதிகாரத்தாலா (கொமைனி) அரசியல் காய்களை நகர்த்தியா (டரீக் ரமதான்) என்பதில்தான் வேறுபடுகிறனர். எப்படிச் செய்தாலும், இஸ்லாமிஸ்டுகல் ஷரியாஆதிக்கத்தை கொண்டு வந்தால், நம் மேற்கு நாகரிகம் இஸ்லாமிய நாகரிகத்திற்க்கு இடம் இழக்கும். அமெரிக்காவில், கொரான் அமெரிக்க சட்ட அமைப்பை வென்றால், நமக்கு 200 ஆண்டுகளுக்கு மேல் பரிச்சயமான அமெரிக்க நாடுகள் முடிவடையும்.
ரஷ்டி நியதிகளை ஏற்றுக்கொள்வது ஷரியாவை முழுதுமாக அமல் படுத்துவதில் முடிவடைகிறது. கொமைனியின் ஆசை வெண்றால், மேற்கு நாகரிகத்தை விரும்புவர்கள் ஷரியாவுக்கு எதிராக வாதாட முடியாது. இஸ்லாம் பற்றிய விவாதங்கள் மூடிம் விளைவுகளை புரிய வேண்டுமானால், பிரித்தனில் முக்கியமான இஸ்லாமிஸ்டு சபை 'முஸ்லிம் கௌன்சில் ஆஃப்பிரித்தன்' வெளியிட்ட சாதுவாக தலைப்பு கொண்ட "இன்னும் புரிதலை நோக்கி" என்ற ரிபோர்ட் , எப்படி பிரித்தானிய அதிகாரிகள் முஸ்லிம் மாணவர்களை கையாள வேண்டும் என உபதேசிக்கிறது.
எம்.சி.பி. பள்ளிகளில் மாணவ்ர்கள் "சமூகத்தில் முன்னேறுவதற்கு தன் சுய அடையாளத்தையும், மதநம்பிக்கைகளையும் இழக்க வேண்டும்" என்ற "தேவையற்ற அனுமானங்கள்" செய்ய வேண்டாம் என்ர குறிக்கோளுடன் செய்யும் அறிவுரைகள் பிருத்தானிய பள்ளிகளின் இயல்பை அடிப்படையில் மாற்றும்.. அதில் சில அறிவுரைகள்
-வழிபாடு" வழிபட்டுக்கு முன் அலம்புவதற்கு நீர் புட்டிகளை கொடுக்க, முடிந்தவரை ஆண் பெண் மாணவர்களுக்கு தனியான பாட்டில்கள். பள்ளிகள் தேர்ந்தெடுத்த "ஒரு வெளி ஆள், வாத்திய்யர், அல்லது மூத்த மாணவர் " ஒருவரை வெள்ளிக்கிழமை வழிபாட்டுக்கு தலமை தாங்குவதற்கும் பிரசங்கத்திற்க்கும் நியமிப்பது
கக்கூஸ்: தண்ணீர் "அலம்புவதற்கு" பாட்டில்களின் தரப்பட வேண்டும்
சமுதாய வழக்கம்: மற்ற பாலாருடன் கைகுலுக்குவதற்கு , மற்ற மானவர்களோ ஆசிரியகளோ, நிர்பந்தம் இருக்கக் கூடாது.
அட்டவணை: இரு முக்கிய முஸ்லிம் பண்டிகை நாளுக்கு எல்லோருக்கும் விடுமுறை.
விடுமுறை கொண்டாட்டம்: முஸ்லிம் இல்லாத மணவர்களையும் அவர்கள் பெற்றோர்களூம் பங்கெடுக்க வேண்டும்..உதாரணமாக ரம்ஜான் போது , முஸ்லிம் மட்டுமல்ல, எல்லா குழந்தைகளும் "ரம்ஜானின் விழுமியங்களை கூட்டுத் தொழுகை அல்லது கூட்டு இஃப்தர் (நோன்பு முடிவு உணவு) மூலமாக" கொண்டாட வேண்டும்.
ரம்ஜான் : 1. இந்த மாதத்தில் ஒரு பரிக்ஷையும் கூடாது , ஏனெனில் "நோன்பும் பரீக்ஷை தயாராகுவதும் குழந்தைகளுக்கு இக்கட்டாக இருக்கும்" 2.
பால் கல்வி இல்லை, அது புண்ர்ச்சிக்கு எதிரான நியதிகளை மதிப்பது.
சாப்பாடு: ஹலால் உணவு கொடுக்கவும். மானவர்கள் வலது கையுடன் சாப்பிட அனுமதிக்கவும்.
தாடி : ஆண் மாணவர்கள் தாடி வளர்க்கலாம்.
விளையாட்டு: மற்ற சேர்ந்து விளையாடுபவர்களை தொடும்படியான விளையாட்டுகளில் , பாஸ்கெட்பால், ஃபுட்பால் போது, ஆண் பெண் மாணவ்ர்கள் தனியாக இருப்பது, அல்லது நீச்சல் போது உடம்பை காட்டுவது.
உடை: ஹிஜாப் அல்லது ஜில்ஜாப் (நீண்ட கால் வரையில் மறைக்கும் கருப்பு உடை) அனுமதிக்கப்பட வேண்டும், நீச்சல் குளத்தில் முஸ்லிம் குழந்தைகள் அடக்கமான நீச்சல் உடையை (பெண்களுக்கு) நீண்ட லியோடார்ட் அல்லது காலுறை பயன்படுத்த அனுமதிப்பு. இஸ்லாமிய தாயத்துகள் அனுமதிப்பு.
குளிப்பறைகள்: தனியான அறைகள், அதனால் முஸ்லிம்கள் அம்மணத்தை பார்ப்பது அல்லது பார்க்கப்படுவதின் மிகுந்த அவமானத்தை தடுப்பது.
இசை: மனித குரல் அல்லது மத்தளம் போன்ற ட்யூன் செய்ய முடியாத உபகரணங்கள் மட்டுமே அனுமதிப்பு.
வாத்தியார், நிர்வாக பயிற்சி: பள்ளி பணியாளர்கள் இஸ்லாமிய "உணர்வு பயிற்சி" எடுத்து முஸ்லிம் "மாணவர்களை பற்றிய சரியான தகவல்களை வைத்து அவர்கள் தேவைகளை மதித்தல்"
கலை: முஸ்லிம் மாணவர்களுக்கு "மனிதர்களைப் பற்றிய முப்பரிமாண உருவங்களை செய்வதில் இருந்து" விலக்கு.
மதபோதனை: எந்த நபி (ஏசுவையும் சேர்த்து) உருவத்தையும் தடை செய்தல்
மொழிபோதனை: அரபு எல்லோருக்கும் நிர்பந்தம்
இஸ்லாமிய நாகரிகம்: ஐரொப்பிய கலை, சரித்திரம், கணிதம், விஞ்ஞானம் முதலியவற்றிர்க்கு முஸ்லிம்களின் பங்களிப்பை படித்தல், ஐரோப்பிய முஸ்லிம் நாகரிகங்களில் பொது அம்சங்களை போதித்தல்..
வெளிப்படையான அல்லது மறைமுக ரஷ்டி நியதிகளை திணித்தல் , எம்.சி.பி. கோர்க்கைபோலான எந்த முஸ்லிம் திட்டத்தையும் விமர்சிப்பது தடைகொடுக்கும், நான் இந்த கட்டுரை எழுத முடியாது, நீங்கள் இதை படிக்க முடியாது.
பள்ளிகளை மாற்றுவது பல மாற்றங்களில் ஒன்றுதான் ஆகும். அடி அடியாக, , சிறிது சிறிதாக இஸ்லாமிஸ்டுகள் கலவி, கலாசாரம், வாழ்முறை ஆகியவற்றில் இஸ்லாமிய விழுமியங்களை புகுத்தி இஸ்லாமிய ஆட்சி வர வழிபோடுகின்றனர். சில மாற்ரங்கள் ஏர்க்கெனவே உள்ளன, பல அமசங்களில் செயல்படுகிறன.. சில உதாரணங்கள்:
ஆண்களுக்கு பலதாரமணம் சில சந்தர்பங்களில் ஐக்கிய ராஜ்ஜியம், நெதெர்லான்ந்து, பெல்ஜியம், இத்தாலி, ஆஸ்ட்ரேலியா, கனேடிய மாகாணமான ஒண்டேரியோ ஆகிய இடங்களில் செல்லுபடி ஆகும்.முஸ்லிம்களின் பெண்கள்-மட்டுமே நீச்சல் குளங்கள் வாஷிங்டன் ஸ்டேட் முனிசிபாலிடிகளில் உள்ளன.. பெண்கள்-மட்டும் வகுப்புகள் வர்ஜீனியாவில் மக்கள் வரிப் பணத்தில் நடக்கின்ரன. 3 யு.எஸ். மாகாணங்களில் முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் போட்ட ஃபோட்டோ டிரைவர் லைசன்சில் அனுமதிக்கப் பட்டுள்ளது.. IKEA அல்லது லண்டன் போலீஸ் துறையில் பணிப் பெண்கள் ஹிஜாப் போடலாம்..
பிக்கிபேங்க் -பன்றி உருவ சேமிப்பு பெட்டிகள் - இரு முக்கிய பிரித்தானிய வங்கிகளில் சேமிப்பு சின்னங்களாக தடை செய்யப் பட்டுள்ளன.. "இஸ்லாமுக்கு மாறான விஷயம்" யு. எஸ் தபால் துறை வழியாக மேற்கிழக்கு நாடுஜளில் இருக்கும் அமெரிக்க துருப்புகளுக்கு அனுப்ப முடியாது. ஒரு ஸ்காத்லாந்து மருத்துவமனையில் பணியாட்கள் ரம்ஜான் மாதத்தில் முஸ்லிம் சகபணியாளர்கள் அல்லது நோயாளிகள் முன் சாப்பிடக் கூடாது. பாஸ்டன் நகரநிருவனம் நிலத்தை ஒரு இஸ்லாமிய நிருவனத்திற்கு சந்தையை விட குறைந்த விலையில் விற்றது.
இந்த சிறிய அல்லது பெரிய இஸ்லாமியமாக்குதலை நோக்கிய அடிகள் மேற்கத்திய ஆசாரங்களையும் நெறிகளையும் குலைக்கின்றன., அவை ஏற்றுக்கொள்பவை அல்ல. முஸ்லிம்கள் சமவாய்ப்புகளுக்கும் பொருப்புகளுக்கும் எற்றவர்கள், ஆனால் விஶேஷ சலுகைகளுக்கு அல்ல. இப்போது இருக்கும் நிலமைக்கு அவர்கள் ஒத்துப் போக வேண்டுமே தவிர, மேற்கத்திய சமூகங்களை இஸ்லாமிய உருவத்தில் மாற்றக் கூடாது. சுதந்திரத்தை அதிகரிப்பது வரவேற்க்கத்தக்கது , ஷரியாவின் இடைக்கால போக்கு வரவேற்க்கத்தக்கது அல்ல.
மீள்பார்வையில், ருஷ்டி விதிகள் 1989ச் அறிவிஜீவிகள் மற்றும் அரசியல்வாதிகள் கொடுத்த ஆதரவு குறிக்கத் தக்கதாகும். . இடதுசாரி அறிவுஜீவிகள் வலதுசாரியாரை விட ருஷ்டிக்கு ஆதரவாகவே இருந்தனர். (உம்; சூசன் சோண்டக் " நம் நாட்டு இறையாண்மை எண்ணைக்கப்பல் மீதான தாக்குதல் எவ்வளவு பாதிக்கப் படுமோ அவ்வளவு எழுத்தாளர் மீதான தாக்குதலால் பாதிக்கப் படுகிறது. ;பேட்ரிக் புகானன் : நாம் அந்த தெய்வநிந்தனை நாவலை குப்பையில் தள்ளவேண்டும்). ஆனால் காலங்கள் மாறிவிட்டன. பால் பெர்மன் சமீபத்தில் "அறிவிஜீவிகளின் ஓட்டம்" என்னும் புஸ்தகத்தில் சக தாராளவாதிகளை - அதன் அட்டைப்பக்கம் சொல்லுவது போல் - "இஸ்லாமிஸ்ட் கருத்து, வன்முறைக்கு எதிராக பாதையை இழந்து விட்டனர்" என சாடுகிறார்.
அப்போது, ஃப்ரான்சின் சோஷலிச ஜனாதிபதி ஃப்ரன்சுவா மிட்டராண்ட் ரஷ்டி மேல் வந்த ஆபத்தை "பெரும் கெடிகுறி" என்றார். ஜெர்மனியின் க்ரீன் கட்சி இரானுடனான எல்ல பொருளாதார உறவுகளையும் துண்டிக்கக் கோரியது. .ஹன்ஸ்-டீட்ரிக் கெண்ஷர், ஜெர்மானிய வெளிவிவகார மந்திரி, ருஷ்டிக்கு ஆதரவாக "நாகரிகத்தையும் மனித விழுமியங்களையும் ரக்ஷிக்கும்" ஒரு ஐரோப்பிய ஒன்றிய தீர்மானம் ஒன்றை முன்மொழிந்தார்.. யு.எஸ். செனேட் எகோபித்த தீர்மானம் ஒன்றில் "எந்த நபரும் புஸ்தகங்களை எழுதவும், வெளியிடவும், வாங்கவும், விற்கவும், படிக்கவும் உரிமையை பாதுகாப்பது" என உறுதி கொடுத்தது.. அப்படிப்பட்ட அரசு தர பதில்கள் இன்றைய சூழலில் எதிர்பார்க்க முடியாது.
1989ல் இருந்து , டென்மார்க் முஹம்மது கார்ட்டுனில் இருந்து இஸ்லாம் மீதான கட்டற்ற ஆய்வுகளை வேலியிட்ட ப்ரொமெதியஸ் புக்ஸ் வரையான ஒவ்வொரு பேச்சு உரிமை செயலுக்கும், பல எழுத்தாளர்களும், , வெளியீட்டு நிருவனங்களும் வரைபவர்களும் தன் சிந்தனைகளை வெளிப்படையான சொல்வதற்க்கு அஞ்சுகிறனர் என சொல்லலாம். இரு உதாரணங்கள் டாம் க்ளானிசியின் 'தி சம் ஆஃப் ஆல் ஃபியர்ஸ்" என்ற நாவலில் ஹமாஸ் போல தீவிரவாதிகளை ஐரோப்பிய புது-நாஜிகளாக மாற்றினர். யேல் யுனிவெர்சிடி ப்ரெஸ் வெளியிட்ட டென்மார்க் கார்ட்டூன் பிரச்சினை பற்றிய புஸ்தகத்தில் அந்த கார்ட்டுன்களை பிரதி செய்ய அனுமதிக்கவில்லை.
இஸ்லாமிஸ்டு மிரட்டல்களுக்கு அடிபணிந்து போவர்கள் கொடுக்கும் காரணங்கள் மோசமானவை" "இந்த முடிவு பொதுமக்கள் பாதுகாப்பை மனதில் வைத்து செய்யப்பர்ரது" "எங்கள் வாடிக்கையளர்கள், பணியாட்களின் பாதுகாபு மிகவும் முக்கியம்" "யாரவது என கழுத்தை நிஜமாகவே வெட்டிவிடுவர் என பயப்படுகிறேன்" "நான் இஸ்லாம் பற்றி என்ன உண்மையிலே நினைத்ததை சொன்னால், இவ்வுலகத்தில் வெகு நாட்கள் இருக்க மாட்டேன்", "நான் எழுதுவது சரிப்படவில்லை என்றால், என் மரண சாசனத்தை நானே எழுதுகிறேன்~
1989ல் இருந்து வரும் மாற்றங்கள் மூன்று 'இசம்'களினால் வருபவை- பன்கலாசாரம், இடதுசாரி பாசிசம், இஸ்லாமிசம். . பனகலாசாரம் எந்த வாழ்க்கை முறையையும், என்ந்த நம்பிக்கைகளையும், எந்த அரசியல் சித்தாந்தத்தையும் சமதளத்தில் வைத்து, ஒன்று மற்றதைவிட சிறப்போ, குறைவோ இல்லை என்கிறது. இத்தாலிய ஜப்பானிய உணவு இரண்டும் எப்படி சுவையாக உள்ளதோ, அப்படியே சூழ்நிலைவாதமும் விக்காவும் யூத-கிருஸ்துவ நாகரிகத்திற்க்கு சரிசமமான பதிலீட்டாக உள்ளன. மற்ற வழிகளுக்கு மேல் நம் நெறிகள் உயர்ந்த ஸ்தானம் இல்லாத போது, ஏன் அதற்காக போரிட வேண்டும்.
ஒரு குறிப்பிட்ட வாழ்நெறி மோசமானதாக இருக்கலாம்: மேற்கத்திய இனமும் ஏகாதிபத்தியமும் உலகை கழிவாக்கும் போது, ஏன் மேற்கு நாகரிகம் யாருக்கு வேண்டும்? ஹ்யுகோ சாவேசின் தலைமையில் பல இடதுசாரி பாசிஸ்டுகள் மேற்கு அதீனத்தை உலகின் மிக முக்கிய ஆபத்தாக பார்த்து, அதை சாம்ராஜ்யம் என அழைத்து, யுஎஸ்ஸையும், இஸ்ரேலையும் முக்கிய போக்கிரியாக பார்க்கிறனர்.
1989 முதல் இஸ்லாமிசம் பெரும் அளவில் வளர்ந்து, தீவிர உடோபியனிசமாகி, இடதுசாரியுடன் கூட்டு வைத்து , சிவில் சமூகங்களை ஆட்டுவித்து, அரசாங்களை எதிர்த்து,அல்லது அபேஸ் செய்து, மேற்குலகில் ஒரு பாதம் வைத்து, சர்வதேச கட்டமைப்புகளில் சாதுர்யமாக தன் குறிகளை முன்னேற்றுகிறது..
மேற்குலகின் பலஹீனமான யின், இஸ்லாமியரின் வன்முறை யாங்கை சந்தித்து உள்ளது. மேற்கு நாகரிகத்தின் காவலர்கள் இஸ்லாமியர்களோடு மட்டுமல்ல, இஸ்லாமியர்களை ஊக்குவிக்கும் பன்கலாசாரவாதிகளுடனும், இஸ்லாமியர்களின் கூட்டாளிகளான இடதுசாரியுடனும் முட்டிமுரண்ட வேண்டியுள்ளது.
அக்டோபர் 10, 2010 ஏற்றம்: இந்த கட்டுரைக்கு வெளியாகும் முன், பல சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. அதைப் பார்க்க என் பிளாகிற்க்கு செல்லவும் "Late Breaking Rushdie-Rule Developments."
செப்டம்பர் 17, 2012 ஏற்றம்: ரஷ்டி கால் நூற்றாண்டு காத்த பின்பு , கொமைனி பட்வா கொடுத்ததன் அனுபவங்களை எழுதுயுள்ளார். இந்த 600 பக்க ஞாபகங்கள் , ஜோஸஃப் அண்டான் என்ற பெயரில், மூன்றாம் மனிதனாக எழுதியுள்ளது ரஷ்டி இன்னும் தன் வாழ்க்கை மாறுதல்களை ஏற்றுக் கொள்ளவில்லை போல உள்ளது. அதன் முதல் பத்தி இதோ :
உலகம் தன்னை சுற்றி வெடித்து, கரும்பறவைகள் வீட்டின் வெளியே திரள ஆரம்பித்தவுடன், அவன் , தனக்கு உன் பழைய வாழ்க்கை முடிந்தது, புது கேடான வாழ்க்கை தொடங்கிற்று என முதலில் சொன்ன பிபிசி பெண் ரிபோர்ட்டரின் பெயரை ஞாபகம் வைத்துக் கொள்ளாமல் இருந்ததற்க்கு தன்னையே கடிந்து கொண்டான்.. அவள் எப்படியோ வீட்டு பிரத்யேக எண்ணில் போன் செய்து " இப்போதுதான் அயடுல்லா கொமைனியினால் மரண தண்டனை கொடுக்கப் பட்டதற்க்கு எப்படி உணர்கிறீர்கள்" கேட்டாள். அது லண்டனில் பிரகாசமான செவ்வாய்க்கிழமை பகலாக இருந்தாலும், அக்கேள்வி பிரகாசத்தை திரை போட்டு மூடியது. என்ன சொல்கிறோம் என தெரியாமல் தைத்தான் சொன்னான் "அது நன்றாக இல்லை". 'நான் இறக்கும் மனிதன்' என நினைத்துக் கொண்டான்.. இன்னும் சில நாட்கள் வாழப்போவதாக நினைத்தான். போனை கீழே வைத்து, இஸ்லிங்டன் ரோ வீட்டின் மேல்மாடியிலிருந்து உத்யோக அறையில் இருந்து கீழே படிகளில் ஓடினான்.. கீழே வாழும் அறைகள் மர ஷட்டர்கள் இருந்தன, அதை அபத்தமாக மூடினான். பிறகு முன் கதவை பூட்டினான்.
இன்னொரு சுவரசிய விஷயம் புத்தக தலைப்பை இஸ்லாம் பற்றி பல்கலையில் படிக்கும் போது தெரிந்து கொண்டார் என்ற என் யூகத்தை நிரூபித்தது. "அவன் கேம்ப்ரிட்ஜில் இரண்டாம் ஆண்டு சரித்திரம் படிக்கும் போது , சைத்தானின் கவிதைகள் பற்றி தெரிந்து கொண்டான்"